BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வரி உயர்வை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. இதனை கண்டித்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு புதிய தமிழக கட்சியின் சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் தமிழக அரசுக்கு வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கண்டன உரையை மாநில கொள்கை பரப்பு செயலாளர் குணா வழங்கினார்.


தொடர்ந்து தமிழக அரசு வரி உயர்வை கண்டித்தும் அதை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராஜா, அருள்ஜோதி, தினகரன் பிச்சைமுத்து உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )