மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து விழிப்புணர்வு முகாம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரி (தன்னாட்சி) சமூகப்பணி துறையும் சுரக்க்ஷா குடும்ப நல ஆலோசனை மையமும் இணைந்து மன அழுத்த மேலாண்மை மற்றும் தேர்வு பயத்தை கையாளுவது குறித்து கோட்டார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

அதில் சுரக்க்ஷா குடும்ப நல ஆலோசனை மையத்தின் குழு உறுப்பினரான திரு தினேஷ் கிருஷ்ணன் அவர்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி? மற்றும் மன அழுத்தம் வராமல் தடுப்பதற்கு வழிமுறைகளை மாணவிகளுக்கு எடுத்துக்கூறினார்.

குடும்ப மனநல ஆற்றுப்படுத்துனரான திருமதி மோனிஷா தேர்வு பயத்தை கையாளுவது எப்படி என்றும் தேர்வுக்கான முக்கிய குறிப்புகளையும் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினார். இதில் பல மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
