BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்,

விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் சரக்கு லாரி ஒன்றும், 3 சொகுசு கார்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல். கஞ்சா கடத்திய 14 பேர் கைது, தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை:

 


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கஞசா கடத்துவதாக தஞ்சை சரக டிஐஜி கயல்விழிக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து

ஏ.டி.எஸ்.பி ஜெயசந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதில்

சரக்கு லாரி ஒன்றும் 3 காரும் வருவதையும் அறிந்து சோதனையிட்டதில் அதில் இருந்த பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பதை அறிந்தவர்கள் வாகனங்களில் இருந்த 14 பேரையும் 2 கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரித்ததும் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் மற்றும் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் என மொத்தம் 14 பேரையும் கைது செய்தனர்.

விசாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சாவை போலீசார் தடுத்து பறிமுதல் செய்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )