மாவட்ட செய்திகள்
உடுமலை பள்ளி மாணவி படுகொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்.

உடுமலையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
உடுமலை காந்தி சவுக் பத்திரகாளியம்மன்லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் தனியார் கோழிப்பண்ணை மேற்பார்வையாளர். இவரது மனைவி கற்பகவல்லி டைலராக பணிபுரிந்து வருகிறார் இவர்களுடைய மகள் ஹர்த்திகா ராஜ் ( 17) அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார் இந்த நிலையில் கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி பெற்றோர் வேலைக்குச் சென்று விட்ட நிலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வந்து வீட்டில் தனியாக இருந்த மாணவி கத்தியால் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார் பட்டப்பகலில் நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் நகரை உலுக்கி விட்டது இந்த கொலை சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் கடந்துவிட்ட நிலையில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
குற்றவாளிகள் கைது செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி வேல் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் என பல தரப்பிலும் போலீசாரின் விசாரணை வளையம் நெருங்கியுள்ள நிலையில் குற்றவாளிகளை விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
