BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் எலெக்ட்ரிக் கடை உரிமையாளரை கடத்த முயற்சி போலீசார் கைது.

எடப்பாடி பயணியர் மாளிகை முன்பு கணேஷ் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கோபி (35) ராஜஸ்தான் மாநிலம் என்பவரை , பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் ராம் , யஸ்வந்த் , மகேந்திர குமார் , அமர்சிங் , தன ராம் ஆகிய 5 பேரும் கோபியை அடித்து ஸ்கார்பியோ காரில் கடத்திச் செல்ல முயற்சி செய்துள்ளனர் .

கோபி சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் மேற்படி கார் முன்புற கண்ணாடியை உடைத்து கடத்த முயற்சி செய்த ஐந்து பேரையும் பிடித்து‌ வைத்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எடப்பாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஐந்து பேரையும் கைது கைது செய்தனர். காயம்பட்ட கோபியை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் விசாரணையில் கணேஷ் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கோபியின் அத்தை மகன் பரத் என்பவர் ஐந்து பேருக்கும் பணம் ரூ 6 லட்சம் கடன் கொடுக்க வேண்டிய உள்ளதாகவும் பரத் அடிக்கடி உறவினர் என்ற முறையில் கடைக்கு வந்து தங்கி செல்வதாக கூறப்படுகிறது.

 

பரத்தை தேடிக்கொண்டு எடப்பாடி வந்து கோபியிடம் ஐந்து பேரும் தகராறு செய்து பணத்தை கேட்டுள்ளனர்.. அவர் தர மறுத்து உள்ளதால் கோபியை கையால் தாக்கி கடத்த முயற்சி செய்து உள்ளனர்.இது குறித்து எடப்பாடி காவல்துறையினர் ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஸ்கார்பியோ காரையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )