மாவட்ட செய்திகள்
கல்லணை வெண்ணாற்றில் பாதிரக்குடி-இந்தலூர் இணைப்பு உயர்மட்ட பாலம் அமைத்திடுக தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

கல்லணையிலிருந்து இந்தலூர்,பத்தாளப்பேட்டை, சோளகம்பட்டி,இராயமுண்டான்பட்டி,புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கணரக வாகனகங்கள் மற்றும் பேருந்து வசதி இல்லாமல் திருக்காட்டுப்பள்ளி அல்லது திருவெறும்பூர் சென்று 20 கி.மீட்டருக்கு மேல் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. கல்லணை பாதிரக்குடியிலிருந்து இந்தலூரை இணைக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில்,
கல்லணையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வெண்ணாற்றில் தற்காலிக பாதை மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது.

தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாதையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் இரா.இராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் கே.செந்தில்குமார்,ஆர்.சதீஸ்குமார்,ஆர்.பாரதி,இப்ராகிம் உள்ளிட்டோர் பார்வையிட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று வெண்ணாற்றில் நிரந்தரமாக பாதிரக்குடி-இந்தலூர் இணைப்பு உயர்மட்ட பாலம் அமைத்திட வேண்டுமென தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
