BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன 3 இளைஞர்களின் உயிர்.

தண்டவாளத்தில் செல்போனை பார்த்தபடி சென்றதால் விபரீதம்.
கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன 3 இளைஞர்களின் உயிர்

செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தில் நின்றுக் கொண்டிருந்த 3 இளைஞர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள அன்புநகர் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் 3 இளைஞர்கள் நேற்று மாலை 6 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் அனைவரும் செல்போனை பார்த்தபடியும், பதிவுகள் போட்டப்படியும் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் வந்த மின்சார ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர், 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பகத்சிங் நகர் பாரதியார் தெருவை சேர்ந்த மோகன், அசோக்குமார், தனியார் கல்லூரி மாணவர் பிரகாஷ் என்பது தெரியவந்தது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்போன் மோகத்தால் இளைஞர்கள் 3 பேர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )