மாவட்ட செய்திகள்
நத்தம் அருகே கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுரதரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டியில் அமைந்துள்ள முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன், விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக பல லட்சம் செலவில் கோவில்கள் கட்டப்பட்டது.
இக்கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை இன்று கோபூஜையுடன் தொடங்கியது.இன்று காலை இரண்டாம், மற்றும் முன்றாம், நான்காம் கட்டயாக வேல்வி பூஜைகள் நடைபெற்று. கடம்புறப்பாடு நடைபெற்றது.
பின்பு சிவாச்சியார்கள் வேத மந்திரம் முழங்க தீர்த்தக்குடங்கலை சுமந்த வண்ணம் கோயிலை வலம் வந்து கோவிலின் விமானத்தில் உள்ள கோபுர கலசத்திர்க்கு புனிதநீர் ஊற்றினர். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.பின்பு ஊர்மக்கள் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
CATEGORIES திண்டுக்கல்