மாவட்ட செய்திகள்
வாணியம்பாடி அருகே மளிகை கடை நடத்தி வரும் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலி பறிப்பு.
வாணியம்பாடி அருகே மளிகை கடை நடத்தி வரும் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலி பறிப்பு.
சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ராஜலட்சுமி (வயது 70) இவர் இவரது வீட்டின் பக்கத்தில் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்துவருகிறார்.
இந்நிலையில் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்ட இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் கேட்டிற்குள் புகுந்து வீட்டு வாசலில் அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை அவர் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து த
ப்பி உள்ளனர்.
இந்த காட்சி அந்த வீட்டின் வெளியே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி டி.எஸ்.பி சுரேஷ்பாண்டியன் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.