மாவட்ட செய்திகள்
ஆம்பூரில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுண்ணாம்புகாளை பகுதியை சேர்ந்த முகமது ஜக்கிரியா (17) இவர் பெங்களூருவில் தனியார் உணவகம் ஒன்றில் தனது தந்தையுடன் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகைக்காக நேற்று சொந்த ஊர் வந்த நிலையில் இன்று மாலை வீட்டிலிருந்த மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளது இதனால் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனை சரி செய்வதற்காக மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் அருகே முகமது ஜக்கிரியா சரி செய்து கொண்டிருந்தபோது மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் உரசி எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியிலேயே சுருண்டு விழுந்து உள்ளார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்த முகமது ஜக்கிரியாவை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றபோது அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து
ஆம்பூரில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.