மாவட்ட செய்திகள்
வேப்பூர் அருகே அரசுபள்ளிக்கு அதிநவீன வசதிகளுடன் புதியகட்டிடம் திறப்பு விழா.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதியகட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வானை தீனதயாளன் தலைமை தாங்கி புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு டாக்டர் அம்பேத்கர் அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் லதா முன்னிலை வகித்தார், தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் திருநாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார் உடற்கல்வி ஆசிரியர் காந்தி தொகுத்து வழங்கினார்,
தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் விஸ்வநாதன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் கிரிஜா, மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பிச்சை பிள்ளை, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பெருஞ்சித்திரன், குணசேகரன், உஷாராணி, பட்டதாரி ஆசிரியை அமுதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் தலைமையாசிரியர்கள் ஏனைய பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் குழந்தைகள் கல்வி தொலைக்காட்சி ஏதுவாக அமைக்கப்பட்ட எல்சிடி டிவியை திறந்து வைத்தனர், பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட கழிவரையையும், ஆழ்துளைக் கிணற்றையும் ஒருசேர திறந்து வைத்தனர்.
இவ்விழாவில் புதிய கட்டிடம் திறப்பு விழா நினைவாக ஊராட்சி செயலாளர் தங்க சரவணன் பெரிய பீரோ அன்பளிப்பாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து இளம்புயல் நண்பர்கள் குழு சார்பாகவும் நாம் படித்த பள்ளிக்கு என்ற வாட்ஸப் குழுவின் சார்பாகவும் முன்னாள் பள்ளி மாணவன் வேல்முருகன் இரண்டு மின்விசிறியை அன்பளிப்பாக வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சிவகாமசுந்தரி, எழிலரசி, சண்முகப்பிரியா மற்றும் பெற்றோர்கள், இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.