மாவட்ட செய்திகள்
சேடபட்டி- ஸ்ரீ பெரிய பகவதி அம்மன் , ஸ்ரீ சின்ன பகவதி அம்மன் திருவிழா நிறைவு பெற்றது- கொளுத்தும் வெயிலிலும் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேருராட்சிக்கு உட்பட்ட சேடபட்டியில் கடந்த மூன்று தினங்களாக கொண்டாடப்பட்ட ஸ்ரீ பெரிய பகவதி அம்மன் ஸ்ரீ சின்ன பகுதி அம்மன் திருவிழா நிறைவுக்கு வந்தது. இதில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கொளுத்தும் வெயில் என்று பாராது அம்மனுக்கு தீச்சட்டிகள் எடுத்தும், கரும்பு காவடிகள் எடுத்தும் , சிலர் துலாபாரத்தில் தங்கள் குழந்தைகளின் எடைக்கு எடை கரும்பு, தானியங்கள், வெல்லம் ,கருப்பட்டி, சர்க்கரை மற்றும் வெள்ளி சாமான்கள்,சில்லரை காசுகள் என எடைக்கு எடை வைத்து தங்கள் காணிக்கையாக நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 1,00000 மேற்பட்ட பக்தர்கள் தங்கள் குல தெய்வம் போல் அனைவரும் ஒன்றிணைந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.