BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் -உணவு பாதுகாப்பு துறை ஆலோசனைக் கூட்டத்தில் சாக்லேட் வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய அதிகாரிகள்.

கொடைக்கானல் -உணவு பாதுகாப்பு துறை ஆலோசனைக் கூட்டத்தில் சாக்லேட் வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய அதிகாரிகள்-மேலும் தரமற்ற சாக்லேட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்லில் தற்போது குளு குளு சீசன் நிலவுகிறது. இதை அனுபவிக்க 10 லட்சத்திற்கும் மேலான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இதில் இங்கு தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட்களை அதிகம் விரும்பி வாங்கிச் செல்வது வழக்கம் .இதனை அடுத்து ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆலோசனை நடத்தினார்கள். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கொடைக்கானல் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் தலைமை தாங்கி பேசுகையில்.
சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய டீத்தூள் ,நறுமண பொருட்கள் மற்றும் சாக்லேட் பாக்கெட்டுகளில் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதியான தேதி கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.., கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருக்கும் ஹோம் மேட் சாக்லேட் களின் காலாவதியான தேதி குறித்து ஸ்டிக்கர் ஒட்டி இருக்க வேண்டும், தயாரிக்கக் கூடிய உணவுப் பொருட்களில் மூலப்பொருட்களின் விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும், பயணிகளுக்கு விற்பனை செய்யக் கூடிய உணவுப் பொருட்கள் தரமாக இருக்கவேண்டும், விற்பனை செய்யக்கூடிய பொருட்களுக்கு வழங்கப்படும் ரசீதில் உணவு பாதுகாப்பு விற்பனை உரிமம் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும் ,சுற்றுலா பயணிகளுக்கு தரமற்ற சாக்லேட்கள் மற்றும் காலத்தின உணவு பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் பேசினார்.மேலும் கூட்ட முடிவில் உணவில் உப்பு, சர்க்கரை ,எண்ணை அளவை குறைப்போம் என்று வியாபாரிகளும், சாக்லேட் தயாரிப்பாளர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )