BREAKING NEWS

மின் கட்டண உயர்வை கண்டித்து – திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து – திருச்சி கலெக்டர்  அலுவலகம் அருகே அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து – திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் அனைத்து வரிகளையும் உயர்த்திய
திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து
அமமுக சார்பில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இன்று ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அ.ம.மு.க. சார்பாக,
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில்
நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில்

திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், பகுதி செயலாளர் ராஜ்குமார்
உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS