முக்கிய செய்திகள்
ஹிஜாப் விவகாரத்தல் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து கர்நாடக மாநிலத்தில் அனைத்து கல்லூரிகளுக்கு 16-ம் தேதி வரை விடுமுறை: கொடி அணிவகுப்பு நடத்திய போலீசார்..
பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தல் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து கர்நாடக மாநிலத்தில் அனைத்து கல்லூரிகளுக்கு 16-ம் தேதி வரை விடுமுறையை நீட்டித்துள்ள அம்மாநில அரசு, பல்வேறு இடங்களில் காவல்த்துறையினரின் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளது. காரனாக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதனை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் கடந்த 8-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது.
பிரச்சனைக்கு தேர்வு எட்டும் வகையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து கல்லூரிகளுக்கு 16-ம் தேதி வரை விடுமுறையை கர்நாடக அரசு நீட்டித்துள்ளது.
ஆனால் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு காண பியூ கல்லூரி விடுமுறை குறித்து அரசு தரப்பில் தெளிவான விளக்கம் தரப்பட வில்லை. அதேவேலையில் ஏற்கனவே அறிவித்தபடி, திங்கட்கிழமை முதல் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹிஜாப் விவகாரத்தல் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க உடுப்பி மாவட்டம் சித்திர துர்கா உள்பட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதனிடையே தங்களின் அடையாளத்தை வெளியீட்டு மனஉளைச்சலை ஏற்படுதித்துவதாக உடுப்பி அரசு பியூ
கல்லூரிக்கு எதிராக ஹிஜாப் தேவை என்று போராட்டம் நடத்தையை மாணவிகளின் பெற்றோர்கள் காவலத்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல் மாந்தியாவில் இந்துத்துவா மாணவர்களின் போராட்டத்தின் பொது அல்லாஹு அஃபர் என முழக்கமிட்ட மாணவி முஸ்கானை நேரில் சந்தித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து பரிசளித்தனர்.