முக்கிய செய்திகள்
50 ஆயிரத்துக்குள் வந்த கொரோனா பாதிப்பு.. இந்த ஆண்டு இந்தியாவுக்கு எப்போது விடை கொடுக்கும் கொரோனா..?
டெல்லி : இந்தியாவில் இன்று மேலும் 44,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய பாதிப்பை விட சுமார் 5 ஆயிரம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக மொத்த கொரோனா பாதிப்பு 4,26,31,421 ஆக உயர்ந்துள்ளது
2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது. இந்த வருடமும் கொரோனா 3வது அலை இந்தியாவில் திடீர் எழுச்சியைக் கண்டது
கடந்த ஜனவரி மாதத்தில் திடீரென தினசரி பாதிப்பு உச்சம் தொட்டது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட போதிலும் கடந்த அலைகளைப் போல உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படவில்லை. மேலும் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
கொரோனா 3வது அலை இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்றும் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் இன்று மேலும் 44,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய பாதிப்பை சுமார் 5 ஆயிரம் குறைவாக உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44 ஆயிரத்து 877 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,26,31,421 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
684 பேர் உயிரிழப்பு கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஒரே நாளில் 684 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதன் காரணமாக கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லடசத்து 8 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,17,591 பேர் மீண்டுள்ளதாகவும், இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 15 லட்சத்து 85 ஆயிரத்து 711 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 97.55 % ஆக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தற்போது 5 லட்சத்து 37 ஆயிரம் 045 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,16,801 பேருக்கும், இதுவரை 1,72,81,49,447 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக நேற்று மட்டும் ஒரே நாளில் 14,15,279 கொரோனா மாதிரிகளும், இதுவரை மொத்தம் 75,07,35,858 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தகவல் அளித்துள்ளது.