முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமண அழைப்பிதழ் கொடுத்த நயன்தாரா.

நடிகை நயன்தாரா தனது திருமண அழைப்பிதழை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்து ஆசி பெற்றார்.
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், இவர்களது திருமணம் குறித்து அவ்வப் போது செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அதுபற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. நிச்சயதார்த்த மோதிரத்தைக் காண்பித்தபடி, நயன்தாரா வெளியிட்டிருந்த புகைப்படம் அப்போது வைரலானது.
CATEGORIES Uncategorized
TAGS சினிமா
