BREAKING NEWS

முதுமலை தேசிய பூங்கா என்னும் போலி இணையதள முகவரி வனத்துறையினர் சைபர் கிரைம் போலீசில் புகார் .

முதுமலை தேசிய பூங்கா என்னும் போலி இணையதள முகவரி வனத்துறையினர் சைபர் கிரைம் போலீசில் புகார் .

சுற்றுலா பயணிகளிடம் மோசடி செய்யும் வகையில் முதுமலை தேசிய பூங்கா எனும் முன்பதிவு இணையதள முகவரியை நம்பி சுற்றுலா பயணிகள் ஏமாற வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தல் .

கோடை விடுமுறையையொட்டி நீலகிரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகையை எளிதாக்கும் வகையில் www.mudumalaitigerreserve.com என்ற இணையதளத்தில் சஃபாரி/தங்குமிடம்/யானை முகாம் ஆகியவற்றை N ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்காக செயல்பட்டு வருகிறது.

இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக MTR நிர்வாகம் எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும் அல்லது எந்த நிறுவனத்துடனும் தொடர்பு கொள்ளாததால், சுற்றுலாப் பயணிகள் ஏதேனும் போலி/மோசடி இணையதளங்களை கண்டு ஏமாற வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் .

இந்த நிலையில் முதுமலை தேசிய பூங்கா என்னும் போலியான இணையதள முகவரியை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த போலியான இணையதளம் முகவரி சம்பந்தமாக வனத்துறையினர் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர் .

CATEGORIES
TAGS