BREAKING NEWS

முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து

முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து

முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து வரும் நிலையில் சாலையோரங்களில் புள்ளிமான் மட்டும் கடமான் கூட்டங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது வழியாக செல்லக்கூடிய சுற்றுலாப் பணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியானது 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட பகுதியாக உள்ளது இங்கு மான்கள், யானைகள், புலிகள்,சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்கள் இந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றன.

தற்போது இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவ மழையானது பெய்து வந்த நிலையில் காடுகள் அனைத்தும் பச்ச பசேலென காணப்பட்டு கண்ணிற்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது வனப்பகுதியின் சாலையோரங்கள் மற்றும் சாலைகளை கூட்டம் கூட்டமாக புள்ளிமான்கள் மற்றும் கடமான் கூட்டங்கள் கடந்து செல்வது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி சாலை ஓரங்களில் உள்ள பொருட்களை உண்ணுவதற்காக கடம்பன் கூட்டங்கள் அதிக அளவில் வருவதால் இவ்வலியாக செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS