முன்னறிவிப்பின்றி வீடுகளை தரைமட்டமாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு.
தேனி செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயா மலைச்சாமி மாற்றுத் திறனாளி தம்பதியான இவர்கள் அப்பகுதியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பட்டா பெற்று வீடுகட்டி வசித்து வருவதாகவும்,
இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான இடத்தை தன்னுடைய இடம் என தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று எந்த ஒரு முன்னறிவிப்பின்றி தங்களது வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிவிட்டதாகவும்,
இதனால் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருவதாகவும். எனவே முன்னறிவிப்பின்றி வீடுகளை இடித்த தனிநபர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் வசிப்பதற்கு வீடு வழங்க வேண்டும் என கூறி மாற்றுத்திறனாளி தம்பதிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
CATEGORIES தேனி