முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு.
அக்கட்சியின் நிறுவன தலைவர் காமராஜ் தலைமைkarurயில் 5 பேர் மாரியம்மன் கோவில் வளாகத்தை சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு நடத்தினர். இதில் அக்கட்சியை சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அறம் மக்கள் கட்சி நிறுவன தலைவர் காமராஜ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டியும், திராவிடம் மாடல் ஆட்சியின் 3 ஆண்டு சாதனையை போற்றியும் அங்கப்பிரதட்சணம் மேற்கொள்வதாக தெரிவித்தார். மேலும், இதே போன்று திருச்சி, சென்னையிலும் வழிபாடு நடத்துவதாகவும், இதில் 100 பேர் பங்கேற்பதாகவும் தெரிவித்தார். இதே போன்று தர்காவில் தொழுகை, சர்ச்சில் பிரார்த்தனையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்