முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..
முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (21.05.2022) சனிக்கிழமை பிற்பகல் வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு வேலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. NMD, விக்ரம் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி தலைவர் சரவணன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் முகமது ராகிப், நவீன் பிரபு, ராஜேஷ், சூர்யா, சையத் சபீர், தப்ரேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர மன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணௌ தலைவருமான கே. விஜயன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சுரேஷ்குமார் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி வாசித்தார். நிகழ்வில் வட்டார தலைவர்கள் வீராங்கன், ஜோதி கணேசன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ரங்கநாதன், முஜம்மில் அஹ்மத், மாவட்ட நிர்வாகிகள் விஜயேந்திரன், கோதண்டம், யுவராஜ், சரவணன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் சசிகுமார், நகர வட்டார நிர்வாகிகள் முருகேசன், ஸ்டாலின், குணசேகரன், அன்பு, சுப்பிரமணி, தேவன், குப்புசாமி, ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் நன்றியுரை ஆற்றினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.