முருகமங்கலம் பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் முருகமங்கலம் கிராமத்தில் பழமையான ஸ்ரீ பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த ஆறாம் தேதி காப்பு கட்டுகளுடன் தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று பலவாற்றங்கரையிலிருந்து விரதம் இருந்த பக்தர்கள் சக்தி கரகம் பால்குடங்களுடன் வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர் பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு பால் அபிஷேகமும் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.