முள்ளுக்குறிச்சி கால்நடை மருத்துவமனை இட மாற்றம் மக்கள் கொந்தளிப்பு.

முள்ளுக்குறிச்சி கிராமத்தில் ஏற்கனவே இயங்கி வந்த கால்நடை மருத்துவமனை புதிய இடத்தில் மாற்றம் மக்கள் கொந்தளிப்பு.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தில் ஏற்கனவே இயங்கி வந்த கால்நடை மருத்துவமனை பழுதடைந்துள்ளதால் திடீரென வடக்கேறி பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய இடத்தில் மாற்றப்பட்ட அரசு கால்நடை மருத்துவமனை சிறுவர்கள் பள்ளி கட்டிடமாக கட்டப்பட்டு பல வருடங்களாக உபயோகப்படுத்தாமல் கட்டிடம் இருந்துள்ளது.
இதில் தற்பொழுது புதுப்பித்து வர்ணம் அடித்து நேற்று காலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த செய்தி அறிந்த அப்பகுதி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சுதா சுரேஷ் தலைமையில் முள்ளுக்குறிச்சி கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அங்கே பேருந்து நிலையத்தில் ஒன்று கூடினர் . எப்படியும் அதிகாரிகள் புதுப்பிக்கப்பட்டுள்ள கட்டிடத்தை திறக்க நமது ஊர் வழியாக தான் வருவார்கள் என எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் அரியலூர் மாவட்ட கால்நடை துறை அதிகாரிகள் வேறு வழியாக சென்று புதிய கட்டிடத்தில் திறப்பு விழா செய்துவிட்டு மீண்டும் அவ்வழியே சென்றதால் பொதுமக்கள் நம்மளை கேள்வி கேட்பார்கள் என பயந்து வேறு பாதையில் சென்று விட்டார்கள். இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் அவ்வழியே வந்த ஆளும் திமுக ஒன்றிய செயலாளர் எழில்மாறனின் காரை மறித்தனர். எங்கள் ஊரில் இருந்த கால்நடை மருத்துவமனையை வேறு பகுதிக்கு மாற்றலாமா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திமுக ஒன்றிய செயலாளர், உங்கள் ஊரில் கட்டிடம் பழுதடைந்து உள்ளது.
அதை சரி செய்து கொடுங்கள் என்று அப்பகுதி பொதுமக்களிடத்தில் ஒன்றிய கவுன்சிலரிடம் இங்கே மாற்றி விடலாம் என உறுதி கூறிவிட்டு சென்றுவிட்டார் இதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்று விட்டனர். இந்த போராட்டத்தில் எந்த வன்முறை சம்பவமும் நடைபெறமால் தளவாய் போலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்