BREAKING NEWS

மூடிய கடையில் திருடா வந்த திருடனை விளக்கமாறால் அடித்து விரட்டிய மூதாட்டி …திருட வந்த இடத்தில் பைக்கை விட்டுச் சென்ற திருடன்

மூடிய கடையில் திருடா வந்த திருடனை விளக்கமாறால் அடித்து விரட்டிய மூதாட்டி …திருட வந்த இடத்தில் பைக்கை விட்டுச் சென்ற திருடன்

 

வேலூர் மாநகரத்துக்குட்பட்ட பலவஞ்சாத்து குப்பம் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர் தெருவில் செந்தாமரை என்பவர் மளிகை கடையை நடத்தி வருகின்றார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மத்தியம் நேரத்தில் கடையின் ஷட்டரை மூடிவிட்டு கடையின் உள்ளேயே ஓய்வு எடுத்திருந்துள்ளார்

அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் கேடிஎம் டியோ பைக்கில் வந்து கடையின் அருகில் நிறுத்திவிட்டு மூடி இருந்த கடையின் ஷட்டரை மெல்லத் திறந்து கடையில் உள்ள இருக்கும் பொருட்கள் மற்றும் பணத்தையும் திருட முயன்றுள்ளார்.

அப்போது கடையின் உள்ளே ஓய்வு எடுத்திருந்த செந்தாமரை திடீரென கடையில் ஷட்டர் திறந்த சத்தம் கேட்டு எழுந்து பார்த்த பொழுது மூடியிருந்த கடையில் உள்ளே ஒருவரை பார்த்ததும் பதட்டம் அடைந்து திருடன் திருடன் என்று கூச்சலிட்டு அருகே இருந்த விளக்கமாறத்தை எடுத்து அடித்துள்ளார்

கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கம் இருப்பவர்கள் வந்ததை கண்ட திருடன் வந்த பைக்கை விட்டு விட்டு தப்பித்து ஓடி உள்ளான்

பின்பு கடையின் உரிமையாளர் பாகாயம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பட்டம் பகலிலேயே மூடிய கடையில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது

Share this…

CATEGORIES
TAGS