BREAKING NEWS

மூன்றாம் ஆண்டு மே தின விழாவை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரேன் ஊர்வலம் நடைபெற்றது

மூன்றாம் ஆண்டு மே தின விழாவை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரேன் ஊர்வலம் நடைபெற்றது

திருச்செங்கோடு வட்டார கிரேன் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மூன்றாம் ஆண்டு மே தின விழாவை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரேன் ஊர்வலம் நடைபெற்றது இதில் 50-க்கும் மேற்பட்ட கிரேன்கள் ஊர்வலமாக சென்றன ஊர்வலத்தை திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் வெங்கட்ராமன் பி ஆர் டி ரிக்ஸ் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் தமிழ்நாடு அனைத்து பாடி பில்டர்ஸ் சங்க தலைவர் வெள்ளியங்கிரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் சேகர் செயலாளர் வெங்கடேஸ்வரன் பொருளாளர் ரத்தினம் ஒருங்கிணைப்பாளர் கார்த்தி உப தலைவர் சீனிவாசன் உப செயலாளர் ராஜசேகர் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர் வழி எங்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது….

Share this…

CATEGORIES
TAGS