மூளை சாவு அடைந்த நபரின் கல்லீரலை, கல்லீரல் பாதிக்க பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பொருத்தி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக பேட்டிமூளை சாவு அடைந்த நபரின் கல்லீரலை, கல்லீரல் பாதிக்க பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பொருத்தி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக பேட்டி
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள் குழு செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்பொழுது பேசிய மருத்துவர்கள் ஆனந்த் வரதன், விகாஷ் முண்ட், பிரேம் சந்தர் அடங்கிய குழுவினர் கூறுகையில்…
குழந்தைகளுக்கு கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் பிலியரி அட்ரேசியா எனப்படும் பிறவி நோயால் பாதிக்கப்பட்ட ஒன்றறை வயது குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.
இந்த நிலையில் மூளை சாவு அடைந்த முதியவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட முழு கல்லீரல் இரண்டு பகுதிகளாக பிரிக்க பட்டு, ஒரு பகுதி கல்லீரலில் சிறிய அளவு ஒன்றரை வயது குழந்தைக்கும், மற்றொரு பெரிய பகுதி கல்லீரல் செயல் இழந்த மற்றோருவருக்கும் பொருத்த பட்டது.
இதன் மூலம் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல், கல்லீரல் பாதிக்க பட்ட இரண்டு நபர்களுக்கு பொருத்தி இரு உயிர்களை காப்பாற்றி உள்ளதாக கூறினார். மேலும் குழந்தையின் மறுவாழ்வுக்கு உதவிய மருத்துவ குழுவினரை எஸ்என்ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயணசுவாமி, வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.