மூவலூர் ஸ்ரீ ஐயனார் சுவாமிக்கு 29 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மூவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவில் அமைந்துள்ளது இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று பால்குட காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதை அடுத்து இன்று காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் அலங்கார காவடி பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு முக்கிய விதிகள் வழியாக வான வேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு ஐயனாருக்கு சிறப்பு பாலாபிஷேகமும் மகாதீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயனார் வணங்கி சென்றனர்.
CATEGORIES மயிலாடுதுறை