BREAKING NEWS

மேற்கு மாவட்டம் தமிழர் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் விஜய் அம்பலம் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம்

 

 

 

 

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் தமிழர் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் விஜய் அம்பலம் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் தமிழர் தேசம் கட்சி மாநிலத் தலைவர் கே .கே. எஸ் அவர்களின் ஆலோசனைக்கிணங்க திண்டுக்கல் மேற்பார்வையாளர் புதுகை காசி அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த ஆலோசனைக் கூட்டம் சித்திரேவு தனியார் மண்டபத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் அம்பலம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை முன்னிறுத்திய நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் தயாராகி வருகின்றது.மேலும் தேர்தலை முன்னிட்டு அனைத்துஅரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்தும் வருகின்றன.
இதனிடையே 2024-2025-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, குழு அமைத்து திண்டுக்கல் தமிழர் தேசம் கட்சி மேற்குமாவட்ட செயலாளர் விஜய் அம்பலம் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து அவர்களுக்கான பணிகளையும் தேர்தலில் எவ்வாறு களம் காண வேண்டும் என்ற யுக்திகளையும் ஆலோசனை களையும் வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் இதே போல் அனைத்து ஒன்றியங்களிலும் நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களுக்கான பொறுப்புகளை வழங்கி தேர்தலில் வெற்றி பெற அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் உடன் தமிழர் தேசம் கட்சி மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கேபில் ரமேஷ், இணைச் செயலாளர் கதிரவன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் அஜித் கண்ணன், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் சின்ன கண்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, வார்டு நிர்வாகிகள், கவுன்சிலர்கள் , உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….

Share this…

CATEGORIES
TAGS