மேல்மாயில் கிராமத்தில் திரௌபதி அம்மன் கெங்கை அம்மன் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் திரௌபதியம்மன் கோயில் மகாபாரத சொற்பொழிவு அக்னி வசந்த தீமிதி விழா கெங்கையம்மன் மற்றும் காளியம்மன்
திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
இத் திருவிழாவையொட்டி இதையொட்டி கடந்த மே மாதம் 31-ஆம்தேதி காப்பு கட்டுதல்
நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது
கொடியேற்றுதல் நிகழ்ச்சி திருவிழா காப்பு கட்டுதல் துவங்கிய நாள் முதல் நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து கிருஷ்ணர் பிறப்பு, தருமர் பிறப்பு,பக்காசூரனுக்கு உணவு அளித்தல், வில்வளைப்பு நடைபெற்றது இதனைத் தொடர்ந்து திரௌபதி அம்மன் அம்மன் திருக்கல்யாணம், சுபத்திரை திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றன
இதனைத் தொடர்ந்து காளியம்மன் திருவிழா கூழ்வார்த்தல், துரியன் படுகளம், கெங்கையம்மன் சிரசு ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றன
இதனைத் தொடர்ந்து தங்கள் நேர்த்திக்கடன்கள் நிறைவேறியதை அடுத்து மஞ்சள் நீராடி மஞ்சள் உடை உடுத்தி பக்தர்கள் தீ மிதித்தனர் அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர்
இதில் திரளானபக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம மக்கள், இளைஞர்கள் ஆகியோர்
செய்திருந்தனர்.