BREAKING NEWS

மே 10ஆம் தேதி ரோஜா கண்காட்சி நடத்தப்படும் என அறிவிப்பு…

மே 10ஆம் தேதி ரோஜா கண்காட்சி நடத்தப்படும் என அறிவிப்பு…

உலகப் புகழ்பெற்ற 126வது மலர் கண்காட்சி மே மாதம் பத்தாம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் …

மலர்கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்ட 388 ரகங்களில் 65 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் காட்சிப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்தார்…

இந்தாண்டு மலர்க்கண்காட்சி சிறப்பு அம்சமாக 10ம் தேதி மற்றும் 20ம் தேதி LASER LIGHT SHOW காட்சிப்படுத்தப்படும்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளுகுளு காலநிலை அனுபவிக்க உதகைக்கு சுற்றுலா வருவது வழக்கம் .அவ்வாறு உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு மே மாதம் 126வது மலர்க்கண்காட்சி மே மாதம் பத்தாம் தேதி முதல் 20ம் தேதி வரை 10 நாட்கள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது. இதற்காக தயார் செய்யப்பட்ட 35 ஆயிரம் மலர்த்தொட்டிகள் ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, டெய்சி, சைக்லமன் மற்றும் பல புதிய ரக ஆர்னமென்டல்கேஸ், ஓரியண்டல்லில்லி, ஆர்கிட், ஆந்தூரியம் போன்ற 75 இனங்களில் 388 வகையான ரகங்கள் சுற்றுலா பயணி பார்வைக்கு விருந்தாக அடுக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி மலர் கண்காட்சிக்காக மலர் அலங்காரத்தை ,மலர் மாடத்தில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்தார்.

இந்த ஆண்டு பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 6.5 லட்சம் மலர் நாற்றுகள் மலர்ந்து அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மலர்கண்காட்சியின் இந்த ஆண்டு சிறப்பம்சமாக மே10 தேதி மற்றும் 20ம் தேதி ஆகிய இரு நாட்கள் தாவரவியல் பூங்காவில் LASER LIGHT SHOW காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் மு.அருணா 10 நாட்கள் நடைபெறும் மலர்கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க அழைப்பு விடுத்த அவர் மே 10ஆம் தேதி உதகை ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி 9 நாட்கள் நடத்தப்படும் என அறிவித்தார்.

இந்த கோடை விழாவில் மலர்க்கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி என மூன்று கண்காட்சிகள் நடத்தப்படும் எனவும் அவர் கூறினர்.

 

CATEGORIES
TAGS