அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் சரிவர கட்டிடம் இல்லாத காரணத்தினால் கடந்த ஒரு வருட காலமாக இந்த பள்ளி அங்கு பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலில் செயல்பட்டு வருகின்றனர் பள்ளி கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு ஒரு வருட காலமாகியும் புதிய கட்டிடப் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
ஆதலால் இன்று பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரும் அம்பாசமுத்திரம் முதல் தென்காசி வரை செல்லும் மெயின் ரோட்டில் ஒரு மணி நேரம் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின் தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அம்பாசமுத்திரம் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மாற்று இடத்தில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. பள்ளி கட்டிடத்தை உடனே கட்ட வேண்டும் என்று குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.