BREAKING NEWS

ராஜகிரியில் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா ஏராளமான மாணவர்கள், பெண்கள் பங்கேற்பு

ராஜகிரியில் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா ஏராளமான மாணவர்கள், பெண்கள் பங்கேற்பு

 

ராஜகிரி அன்னை கதீஜா ரலி கல்வி மையத்தின் எட்டாமாண்டு ஆண்டுவிழா, இமாம் அபூ ஹனீபா பயிற்சி மையம் ஆறாமாண்டு ஆண்டு விழா மற்றும் கோடைகால பயிற்சி 14-ம்ஆண்டு, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா ராஜகிரி காயிதே மில்லத் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ராஜகிரி பெரிய பள்ளி தலைவர் யூசுப் அலி. தலைமை வகித்தார்.

செயலாளர் முகம்மது சுல்தான் முன்னிலை வகித்தார்.பெரிய பள்ளி துணை இமாம் பஹ்மி கிராஅத் ஓதி விழாவை துவக்கி வைத்தார். மைய ஆலோசகர் அனீஸ் வரவேற்றார். கல்வி மைய முதல்வர் சாகுல் ஹமீது சிறப்புரை ஆற்றினார். மண்டல பொறுப்பாளர்கள் சல்மான் பாஜில், உமர் பாரூக், மூத்த ஆசிரியை ஜீனத், தலைமை ஆசிரியை ஜுவைரியா பானு ஆகியோர் கல்வி மைய பணிகள் குறித்து விளக்கி பேசினர்.

விழாவில் 300 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மைய தலைவர் மூபா பாரூக், முத்தவல்லி ரவூப், துணைச் செயலாளர் சபீர், வெல்பேர் தலைவர் முகமது காசிம், செயலாளர் அன்வர், மற்றும் பெரிய பள்ளி. உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியில் பொருளாளர் முல்லா பாரூக் நன்றியுரை ஆற்றினார்.

CATEGORIES
TAGS