ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மே 1 தொழிலாளர் தினம் முன்னிட்டு தேசிய பொறியியல் தொழிலாளர்கள் இருசக்கர வாகன பேரணி.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மே 1 தொழிலாளர் தினம் முன்னிட்டு தேசிய பொறியியல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இருசக்கர வாகன பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய பொறியியல் தொழிலாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமையேற்று தக்காண்குளம் பகுதியில் இருந்து கருமாரியம்மன் கோவில், பேருந்து நிலையம், அண்ணா சாலை,காந்தி ரோடு வழியாக திருத்தணி சாலை வரை இருசக்கர வாகனம் பேரணி நடத்தது. தொடர்ந்து சங்க கொடி ஏற்றி வைத்தார். தொழிலாளர் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கினார்கள் .
அப்போது பேசிய சங்க தலைவர் தொழிலாளர்கள் தங்கள் பணி புரியும் நிறுவனத்திற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்து பணியாற்றி வேண்டும். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் போது தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து நல தட்டங்களையும் நிர்வாகம் சிறப்பாக செய்யும் என்பவே தொழிலாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தொழிலாளிகள் பணிபுரியும் நிறுவனத்திற்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும், பணிபுரியும் இடங்களில் தொழிலாளர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனை வழங்கினார்கள். அப்போது தேசிய பொறியியல் தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.