BREAKING NEWS

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் தேசிய கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் தேசிய  கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி துணை கொரடாவுமான சு.ரவி கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் ஆற்காடு சக்ஷம் அறக்கட்டளை சேந்தமங்கலம் பாரத் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரத் மாதா நூற்றாண்டு அரிமா சங்கம் ஆகியவை இணைந்து தேசிய இரு வார கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். பாரத் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சக்ஷம் அறக்கட்டளை மாவட்ட செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார் பள்ளியின் துணை முதல்வர் விஜயலட்சுமி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு ரவி குத்த விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில்,கண் தானம் குறித்து அனைத்து மக்களுக்கும் குறிப்பாக கிராமப்புற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கண் தானம் செய்யப்பட்டால் அதன் மூலம் பார்வையில்லாதவர்கள் பார்வை பெறுவர். பார்வை இல்லாதவர்களின் வாழ்க்கை மேலோங்கும் கண் தானம் அதிகரித்தால் பார்வையற்றவர்கள் என்பவர்களே இருக்க மாட்டார்கள். நானும் எனது கண்களை தானம் செய்துள்ளேன். மாணவ செல்வங்கள் ஆகிய நீங்களும் கண் தானம் செய்ய வேண்டும் அது மட்டும் அல்லாமல் கண் தானம் குறித்த விழிப்புணர்வை தங்கள் குடும்பத்தினருக்கும் தெரிவிக்க வேண்டும் என உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அதிமுக நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயன் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அன்பரசு ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், லோகநாதன் புருஷோத்தமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS