ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் காலணி.
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் காலணி பகுதியில் 22 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், மேல் நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தயாவதி ராஜாராம் தலைமை தாங்கினார்.
காவேரிப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அனிதா , வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வஜ்ரவேல்,பொதுக்குழு உறுப்பினர்கள் மாணிக்கம், சிட்டிபாபு ,மாவட்ட துணைச் செயலாளர் துரைமஸ்தான், காங்கிரஸ் கிளை தலைவர் ஆறுமுகம், செயலாளர் ரகு
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய சுற்றுச்சூழல் அமைப்பாளர் ரஜோஷ் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு 12 லட்ச மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் கட்டியம் ,20 லட்சம் மதிப்பில் 60,000 லிட்டர் மேல் நீர் தேக்க தொட்டியை கல்வெட்டு திறந்தும் , ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி சம்பந்தமான பேனா ,பென்சில், நோட்டு புத்தகம் வழங்கினார்.