ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமி திருக்கோவில் கிருத்திகை கிரிவலம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமி திருக்கோவில் கிருத்திகை கிரிவலம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மூலவர் ,உற்சவ மூர்த்தியான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனைகள் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் உற்சவ சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கிரிவலத்தில் பாணாவரம் காவேரிப்பாக்கம் நெமிலி சோளங்கர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள்