ராணி மங்கம்மாள் மண்டபத்தை இடித்ததை தட்டி கேட்டு அதற்காக போராடியவர்கள் மீது அவதூறு பரப்பிய 2 பேரை கைது
திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தில்செய்ய கோரி திருச்சி எஸ்.பி யிடம் கிராம மக்கள் புகார்
திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தில் முன்னர் திருச்சியை ஆண்ட ராணி மங்கம்மாள் மண்டபம் ஒன்று இருந்தது. அதனை கடந்த 12.7.2024 ஆம் தேதி சில நபர்கள் வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு அதனை இடித்தனர். இந்த நிலையில் அதனை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள், சாமானிய மக்கள் நலக் கட்சி, மற்றும் சில அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தி வந்தனர். அப்படி போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர்கள் ஜோசப், ராஜ்குமார், முத்துராமன், தேவராஜ் ஆகியோர்கள் மீது இவர்கள் அனைவரும் ராணி மங்கம்மா மண்டபத்தை இடித்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறி நேற்று 25ஆம் தேதி வாட்ஸ் அப் மூலம் பெர்னாட் மற்றும் ஜேக்கப் என்பவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இதனைக் கண்டித்தும் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இரண்டு பேரையும் கைது செய்யப் கோரியும் இன்று திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி வருண்குமாரை சந்தித்து அண்ணா நகர் பகுதி கிராம மக்கள், சாமானிய மக்கள் நலக் கட்சி, தமிழ் புலிகள் கட்சி மற்றும் சில அமைப்புகள் சேர்ந்து மனு அளித்தனர் மனுவை வாங்கிக் கொண்ட எஸ்.பி வருண் குமார் விசாரணை செய்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த நிகழ்வில் அண்ணா நகர் பகுதி கிராம தலைவர் தேவராஜ், சாமானிய மக்கள் நலக் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப், சாமானிய மக்கள் நலக் காட்சி ஷைனி, சமூக ஆர்வலர்கள் முத்துராமன், ராஜ்குமார் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் பொது நலமைப்புகள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.