BREAKING NEWS

ரூ.7.07 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

தேனி மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தேனியில் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் மற்றும் கம்பத்தில் தலா ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை இன்று (29.07.2024) காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் புதிய அலுவலக கட்டடங்களில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்கள்.

கம்பத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.மகாராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இப்புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள், தரை தளம் மற்றும் முதல் தளம் என 2 தளங்களாக கட்டப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், துணைத்தலைர், வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் பொறியாளர்களுக்கான தனித்தனி அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விசாலமான கூட்ட அரங்கம், கணினி அறை, பயிற்சி அரங்கம், மின்தூக்கி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அறைகளுடன் நவீன வசதிகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS