ரோட்டரி கிளப் ஆப் பவானி கூடல் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ரோட்டரி கிளப் ஆப் பவானி கூடல் 2022-23-ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா பவானி அருகிலுள்ள லட்சுமி நகர் பவிஷ் பார்க்கில் நடைபெற்றது.
இதில் புதிய தலைவராக அண்ணாதுரை, செயலாளராக விவேகானந்தன், பொருளாளராக தவமணி உட்பட நிர்வாகிகள் பலர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பவானி தொகுதி எம்எல்ஏ கருப்பணன், ஆளுனர் நவமணி உட்பட முன்னாள் நிர்வாகிகள் பவானி குமாரபாளையம் நகரின் முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
CATEGORIES Uncategorized
TAGS தமிழ்நாடு