ரோட்டரி கிளப் ஆப் பவானி குமாரபாளையம் 2022-23 ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை ரோட்டில் உள்ள ரோட்டரி ஹாலில் ரோட்டரி கிளப் ஆப் பவானி குமாரபாளையம் 2022-23-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா செவ்வாய் கிழமை அன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸெல் கல்வி நிறுவனங்களின் தலைவர் A.K. நடேசன், சண்முகா குரூப் ஆப் கம்பெனி தலைவர் V. ராஜமாணிக்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இதனைத் தொடர்ந்து 2022-23 ம் ஆண்டு புதிய தலைவர் C. மகேந்திரன், செயலாளர் P.R. ஸ்ரீனிவாசன், பொருளாளர் R. ஜீவா சித்தையன் மற்றும் பலர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். பின்னர் அரசு பள்ளி, கல்லூரி மாணவி, மாற்றுத்திறனாளி என பலருக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் வரதராஜ், பிராந்திய ஒருங்கிணைப்பாளர் உத்தம ராஜ், துணை கவர்னர் கருணாகரன், கனபாலன், பரணி, ஸ்ரீனிவாசன், முருகேசன், சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
