BREAKING NEWS

லோகேஷ்கனகராஜ் ன் புதிய ஷார்ட் பிளமிருக்கு…….. டைட்டில் இதானா….?

லோகேஷ்கனகராஜ் ன் புதிய ஷார்ட் பிளமிருக்கு…….. டைட்டில் இதானா….?

தமிழ் சினிமாவில் LCU எனப்படும் எனும் Lokesh Cinematic Universe கான்செப்ட் ஐ அறிமுகப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் .கார்த்தியின் கைதி ,விஜய்யின் லியோ, கமலின் விக்ரம் போன்ற படங்களை இணைத்து ட்ரெண்ட் ஆக்கிய லோகேஷை பாராட்டிய ரசிகர்கள்,இந்த வகையான யூனிவெர்ஸ் கதைக்களத்தில் லோகேஷ் இயக்கும் படங்களை Lokesh Cinematic Universe(LCU) என்று ட்ரெண்ட் செய்து இணையத்தில் வைரலானது .இதனால் லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு ரசிகர் பட்டியல் அதிகரித்ததுனு சொல்லலாம்.

LCU வின் அடுத்த படமாக கைதி 2 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் .LCU ஐ பற்றிய புதிய அப்டேட் வழங்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த அப்டேட் ல் யூனிவெர்சின் தொடக்கம் குறித்து ஒரு ஷார்ட் பிலிம் படமாக்கப்பட்டிருப்பதாகவும் ,இந்த ஷார்ட் பிலிம் ஐ கூடிய விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .

இந்த ஷார்ட் பிளமிருக்கு”LCU Chapter 0 :பிள்ளையார் சுழி” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Share this…

CATEGORIES
TAGS