வங்காரம்பேட்டை ருத்ர மகா காளியம்மன் கரகம், பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வங்காரம்பேட்டை ஆற்றங்கரை தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலயம் 8-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் நவநீத பெருமாள் கோவிலில் இருந்து பெண்கள் அம்மனுக்கு சீர்வரிசை தட்டு எடுத்து வந்தனர்.
மறுநாள் காலையில் குடமுருட்டி ஆற்றிலிருந்து பக்தர்கள் சக்தி கரகம். பால்குடம், அக்னிசட்டி. சூலம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும். கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது. இதில் வங்காரம்பேட்டை அதனை சுற்றி உள்ள கிராமங்கள் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் திருவிழா ஏற்பாடுகளை ஆலய பூசாரி சிவபாலன் குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்
CATEGORIES தஞ்சாவூர்