வடக்கு மாவட்ட திமுக கழகம் சார்பில் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகழகச் செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்களின் ஆணைக்கிணங்க திமுகழகத்தில் இரண்டாவது முறையாக கழகத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள தமிழகத்தின் முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
திருப்பூர் இரயில் நிலையம் அருகிலுள்ள அண்ணா பெரியார் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வடக்கு மாவட்ட திமுகழக அலுவலகத்திலுள்ள முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதில் மாவட்ட கட்டுமான தொமுச பொது செயலாளர் பி.எஸ் பாண்டியன், மாவட்ட தொமுச கவுன்சில் துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி, கருவம் பாளையம் பகுதி அவைத்தலைவர் தம்பி குமாரசாமி,தெற்கு சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் பக்ருதீன், முரசொலி வீரப்பன்,
வர்த்தக அணி பி. சி. குமார், ஆபிஸ் ராமசாமி, மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன், மாவட்ட ஹோட்டல் தொமுச மகேஷ், தொமுச நிர்வாகிகள் ராஜ்மோகன், கார்த்திகேயன், ஜின்னா பாய், விநாயக மூர்த்தி, பாலாஜி, தெற்கு மகளீர் அணி காலமணி , உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பி எஸ் பாண்டியன் , ஈ.பி.அசரவணன்,பாபு என்கிற இணையத்துல்லா ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.