BREAKING NEWS

வட மாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!

வட மாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!

வேலூரில் வட மாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் கணேசன்( 24 ), சதீஷ் (21), சீனிவாசன் (20). இவர்கள் 3 பேரும் கஞ்சா போதையில் தொடர் அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தனர்.

குறிப்பாக சிஎம்சி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அறை எடுத்து தங்கி உள்ள வட மாநிலத்தவர்களை தாக்கி அவரிடம் பணம் பறிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வெளியில் தங்கி இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியை இந்த மூன்று இளைஞர்களும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த தகவல் தெரியவந்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வேலூர் வடக்கு போலீஸார் சதீஷ் உட்பட 3 இளைஞர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்களும் பிடிபட்டது. கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் சேலம் மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர்.

இவர்களை வெளியே விட்டால் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி மூன்று பேரின் காவலையும் நீட்டிக்க முடிவு செய்தார். இதையடுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நீட்டிக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டுள்ள மூன்று இளைஞர்களிடமும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததற்கான உத்தரவு நகல் அவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS