வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட வர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஆட்சியர்!
வேலூர் மாவட்டம்,பேரணாம்பட்டு தாலுகா, சென்டத்தூர் ஊராட்சியில் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.
இந்நிகழ்வின்போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு. பாலச்சந்திரன், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.