வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்திரவாதம்
அடிப்படை வசதி தேவை என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் பெட்டியில் புகார்
நாடு முழுவதிலும் பாஜகவினரால் மக்களின் குறைகள் மனு மூலம் புகார் பெட்டியில் பெறப்பட்டு மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதில் பாஜகவினர் மும்பரம் காட்டி வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் போகலூர் பாஜக ஒன்றிய தலைவர் வெங்கடேசன் தலைமையில் அப்பகுதி சுற்றுவட்டார பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகளை புகார் பெட்டியின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் மனுவாகப் பெறப்பட்டது குறிப்பாக கிழவன் சேதுபதியின் முதல் தலைநகராக விளங்கும் போகளுரில் அவரது நினைவு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு நவோதயா பள்ளி வேண்டும் எனவும் மனுவில் பொதுமக்கள் குறிப்பிட்டிருந்தனர்.
CATEGORIES இராமநாதபுரம்
TAGS இராமநாதபுரம்