BREAKING NEWS

வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மையில் முண்ணனி நிறுவனமாக திகழ்ந்து வருகிற சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு, 3000 இஞ்சினியரிங் மாணவர்களுக்கு டெவலப்பர் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மையில் முண்ணனி நிறுவனமாக திகழ்ந்து வருகிற சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு, 3000 இஞ்சினியரிங் மாணவர்களுக்கு டெவலப்பர் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தொடர்பு மேலாண்மையில் உலகலாவிய முண்ணனி நிறுவனமாக சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் திகழ்ந்து வருகின்றது.
இந்த நிறுவனத்தின் சார்பாக இன்று கோவை பந்தயசாலையில் உள்ள தனியார் உணவகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை பிரிவின் உதவி துணை தலைவர் கமல் காந்த் கூறும் பொழுது..
டிஜிட்டல் துறையில் இந்தியாவை முன்னெடுத்து செல்லும் வகையில், ஏஐ என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் துறையை மேம்படுத்தி அதன் மூலமாக அனைத்து தொழில்களின் வணிக மேலாண்மையை மேம்படுத்த புதிய புதிய யுக்திகளை கொண்டு வரும் நோக்கில் சேல்ஸ்போர்ஸ் இயங்கி வருகின்றது. மேல்ம் ஏஐ துறையில் தற்போது ஏற்பட்டுள்ள புரட்சி காரணமாக வாடிக்கையாளர்களின் உறவுகள் மேம்படுத்தத் பட்டு வருகிறது.

இது பணியாளர்களின் உற்பத்தி திறனை உயர்த்துகிறது. தற்போது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் 1 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு திறன் பயிற்சியை வழங்கி இந்தியாவை திறன் தலைநகராக மாற்றும் யுக்திகளை செய்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு பொறியில் கல்லூரிகளில் 7வது செமஸ்டர் கிரெடிட் திட்டத்தின் கீழ் சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் மாணவர்கள்க்கு டெவலப்பர் பயிற்சியை வழங்க உள்ளது இதற்காக தமிழக அரசுடன் கைகோர்த்து செயல்பட உள்ளது. இதன் மூலமாக சுமார் 3000 இஞ்சினியரிங் மாணவர்களுக்கு டெவலப்பர் பயிற்சியை அளிக்க முன்வந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் டிஜிட்டல் இந்தியா மூலமாக தொழில்நுட்ப திறன்களை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் இதன் ஒரு கட்டமாக வணிகங்களில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறந்த அனுபவங்களை வழங்கும் என்றார் இந்த நிகழ்ச்சியின் பொழுது ஜிஎம் ப்ரோபைல் இன்டஸ்ட்ரீஸ் நிறுவடத்தின் தலைமை இயக்க அதிகாரி டாக்டர் ராமச்சந்திரன், இந்திய பங்குதாரர் ரோஹித் குமார், ப்ரீஸ்கேல் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அஜய் ஜெயகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS