வாயாலேயே வடை சுடுபவர் பிரதமர்,, மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளையும், புதிய திட்டங்களையும் நிறைவேற்றியவர் தமிழக முதலமைச்சர்: :-
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது. ரூ.800 விலை ஏற்றிவிட்டு தற்போது தேர்தலுக்காக ரூ.100 குறைப்பதாக அறிவித்து மகளிரை பாஜக ஏமாற்றுகிறது என்றார்.
தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழுவதைப்போன்ற புகைப்படத்தை காட்டி இவர் யார் என்பது தெரிகிறதா? என கேள்வி எழுப்பிய உதயநிதி, அவர் கேடுகெட்ட, மானங்கெட்ட அப்போதைய முதலமைச்சர் என்றும், அவர் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதாகவும், அவர் எதிர்கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர் என விமர்சித்தார்.
மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் தமிழ்நாடு முதலமைச்சர். அதேபோல், தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத காலை உணவுத் திட்டத்தையும் அவர் நிறைவேற்றியுள்ளார். ஆனால், மோடி வாயாலேயே வடை சுடுபவர். அப்படி சுட்ட வடையையும் அவர் உங்களுக்குத் தர மாட்டார். அவர் தான் சாப்பிடுவார் என விமர்சித்தார். இனிமேல் ஒன்றிய பிரதமர் பெயர் மிஸ்டர் 29 பைசா என்றும், மேல் நீங்கள் அவரை அப்படித்தான் கூப்பிடனும் எனவும் , அப்போதுதான் அவர் மண்டையில் உரைக்கும் என கூறி பீகார் மாநிலத்துக்கு ரூ.7, உத்தரபிரதேசத்துக்கு ரூ.3 வழங்கும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி வரவில் இருந்து 29 பைசா மட்டுமே வழங்குவதை குறிப்பிட்டு விமர்சித்தார்.
மேலும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த பெரும் கனமழையால் தமிழ்நாட்டில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது ஒன்றிய அரசு ஒரு நிவாரண நிதியும் அளிக்கவில்லை என்றும், நீட் தேர்வில் 22 குழந்தைகள் தற்கொலை செய்த போதும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழகத்திற்கு மோடி வருகை தருகிறார் என குற்றம் சாட்டினார். தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரைக்கும் அடிக்கல் நாட்டப்பட்ட அந்தக் கல் தன்னிடம்தான் இருக்கும் என பொதுமக்களிடம் காட்டி மத்திய அரசை விமர்சித்தார்.
மேலும் சிஏஏ சட்டத்தை நிச்சயமாக தமிழகத்திற்குள் தமிழக முதல்வர் அனுமதிக்க மாட்டார் என தெரிவித்தார். அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் சுதா, மாவட்ட திமுக செயலாளர் நிவேதாமுருகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர். திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளையும், புதிய திட்டங்களையும் நிறைவேற்றியவர் தமிழக முதலமைச்சர்: வாயாலேயே வடை சுடுபவர் பிரதமர்: மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு:-
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது. ரூ.800 விலை ஏற்றிவிட்டு தற்போது தேர்தலுக்காக ரூ.100 குறைப்பதாக அறிவித்து மகளிரை பாஜக ஏமாற்றுகிறது என்றார்.
தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழுவதைப்போன்ற புகைப்படத்தை காட்டி இவர் யார் என்பது தெரிகிறதா? என கேள்வி எழுப்பிய உதயநிதி, அவர் கேடுகெட்ட, மானங்கெட்ட அப்போதைய முதலமைச்சர் என்றும், அவர் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதாகவும், அவர் எதிர்கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர் என விமர்சித்தார்.
மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் தமிழ்நாடு முதலமைச்சர். அதேபோல், தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத காலை உணவுத் திட்டத்தையும் அவர் நிறைவேற்றியுள்ளார். ஆனால், மோடி வாயாலேயே வடை சுடுபவர். அப்படி சுட்ட வடையையும் அவர் உங்களுக்குத் தர மாட்டார். அவர் தான் சாப்பிடுவார் என விமர்சித்தார். இனிமேல் ஒன்றிய பிரதமர் பெயர் மிஸ்டர் 29 பைசா என்றும், மேல் நீங்கள் அவரை அப்படித்தான் கூப்பிடனும் எனவும் , அப்போதுதான் அவர் மண்டையில் உரைக்கும் என கூறி பீகார் மாநிலத்துக்கு ரூ.7, உத்தரபிரதேசத்துக்கு ரூ.3 வழங்கும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி வரவில் இருந்து 29 பைசா மட்டுமே வழங்குவதை குறிப்பிட்டு விமர்சித்தார்.
மேலும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த பெரும் கனமழையால் தமிழ்நாட்டில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது ஒன்றிய அரசு ஒரு நிவாரண நிதியும் அளிக்கவில்லை என்றும், நீட் தேர்வில் 22 குழந்தைகள் தற்கொலை செய்த போதும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழகத்திற்கு மோடி வருகை தருகிறார் என குற்றம் சாட்டினார். தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரைக்கும் அடிக்கல் நாட்டப்பட்ட அந்தக் கல் தன்னிடம்தான் இருக்கும் என பொதுமக்களிடம் காட்டி மத்திய அரசை விமர்சித்தார். மேலும் சிஏஏ சட்டத்தை நிச்சயமாக தமிழகத்திற்குள் தமிழக முதல்வர் அனுமதிக்க மாட்டார் என தெரிவித்தார். அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் சுதா, மாவட்ட திமுக செயலாளர் நிவேதாமுருகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர். திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.