BREAKING NEWS

வாராக்கடன் 1.45 லட்சம் கோடி… வசூல் 19,000 கோடி… மீதம் ஸ்வாஹா: சு.வெங்கடேசன் அதிர்ச்சி தகவல்!

வாராக்கடன் 1.45 லட்சம் கோடி… வசூல் 19,000 கோடி… மீதம் ஸ்வாஹா: சு.வெங்கடேசன் அதிர்ச்சி தகவல்!

பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 8 ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வாராக்கடன் உள்ள நிலையில், அதில் 19,000 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

 

வங்கிகள் சார்பில் கடனை வசூலிக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுத்தபின் வசூலிக்க முடியாத சூழலில் அதை வாராக்கடனாக வங்கிகள் அறிவிக்கும். வங்கிகள் கடனை தள்ளுபடி செய்த பின்பும், கடன் வசூலிப்பு பணிகளைத் தொடரமுடியும். ஆனால் இதுவரை கடன் தள்ளுபடி பட்டியலையும், கடன் வாங்கியவர்களின் பெயரையும் வங்கிகள் வெளியிடவில்லை. கடந்த 2019-2020-ம் நிதி ஆண்டில் வங்கிகள் 2 லட்சத்து 34 ஆயிரத்து 170 கோடி தள்ளுபடி செய்துள்ளன. 2018-2019-ம் நிதியாண்டில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 328 கோடியும், 2016-2017-ம் நிதியாண்டில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 373 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 2020-21 நிதியாண்டில் 5 வங்கிகள் சேர்ந்து 89 ஆயிரத்து 686 கோடி கடன் தொகையைத் தள்ளுபடி செய்துள்ளன.
இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் வாராக்கடன் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 8 ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வாராக்கடன் உள்ளது. அதில் வசூல் ஆனது 19,000 கோடி. மீதம் ஸ்வாஹா.. கட்டத்தவறியவர்களின் பெயர்கள் ரகசியமாம். கல்விக் கடன், குறு நிதி கடன்களை வசூலிக்கக் கழுத்தில் துண்டைப் போடுவார்கள். கனவான்கள் எனில் கழுத்துக்கு மேல் காண்பிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )